ரப்பர் தோட்டத்தில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம்
உயிரிழந்தவரின் கால் மற்றும் மார்புப் பகுதியில் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை வெலிகம உடுகாவ பிரதேசத்தில் உள்ள இறப்பர் தோட்டத்தில் வெட்டுக் காயங்களுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்றை பிரதேசவாசிகள் இன்று (13) கண்டுள்ளனர்.
வெலிகம பொலிஸ் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, உயிரிழந்தவரின் காற்சட்டைப் பையில் பணமும் வங்கிப் பற்றுச்சீட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவரின் கால் மற்றும் மார்புப் பகுதியில் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நபரின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை.