ஹட்டனில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்
ஹட்டன், செனன் தேயிலை தோட்டத்தில் ஆண்ணொருவரின் சடலம் இன்று (03) மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன், செனன் தேயிலை தோட்டத்தில் ஆண்ணொருவரின் சடலம் இன்று (03) மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
செனன் தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ராமையா மனோகர் (வயது 49) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் ஹட்டன் டிப்போவில் பணியாற்றியவர் எனவும் நான்கு நாட்களாக வேலைக்கு வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவி ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்திருந்தாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில், பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா - கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலையின் வைக்கப்பட்டுள்ளது.