உலககோப்பை போட்டியை பார்க்க வீட்டை விற்ற 73 வயது ரசிகர்! இப்படியும் ஒருவரா?
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த உதவியும் அப்துல் ஜலீலுக்கு செய்யவில்லை.

ஒவ்வொரு நாட்டிலும் ஒரு மிகப்பெரிய கிரிக்கெட் ரசிகர்கள் இருப்பார்கள். எப்படி இந்திய கிரிக்கெட் போட்டியை பார்க்க சச்சின் ரசிகர் தன் உடல் முழுவதும் மூவர்ண கொடியின் பெயிண்டை அடித்து விட்டு வருவாரோ அதே போல் பாகிஸ்தானிலும் ஒரு கிரிக்கெட் ரசிகர் இருக்கிறார்.
அவருக்கு தற்போது வயது 73 ஆகிறது. கிரிக்கெட் சாச்சா அதாவது கிரிக்கெட் மாமா என்று பாகிஸ்தான் ரசிகர்கள் அவரை அன்புடன் அழைப்பார்கள்.
அந்த வகையில் இதுவரை பாகிஸ்தான் விளையாடிய 500 மேற்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை அவர் பார்த்திருக்கிறார்.
சௌத்ரி அப்துல் ஜலீம் என்ற அந்த நபர் 1969 ஆம் ஆண்டு முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டியை பார்த்திருக்கிறார். அப்போது அவருக்கு வயது 19.
கிரிக்கெட் மீது ஏற்பட்ட காதலை அடுத்து பாகிஸ்தான் அணி எங்கு செல்கிறதோ அவரும் கண்டிப்பாக மைதானங்களுக்கு சென்று பாகிஸ்தான் அணிக்காக குரல் கொடுப்பாராம்.
இப்படி தொடர்ந்து அவர் சென்றதைப் பார்த்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே அப்துல் ஜலீலுக்கு சிறப்பு சலுகைகளை அளித்திருக்கிறது.
இதனை அடுத்து 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த உதவியும் அப்துல் ஜலீலுக்கு செய்யவில்லை.
இதனால் கொஞ்சமும் மனம் தளராத அப்துல் ஜலீல் தன்னுடைய வீட்டை விற்றுவிட்டு அதில் கிடைத்த பணத்தை வைத்து இங்கிலாந்துக்கு சென்று 1999 ஆம் ஆண்டு உலக கோப்பையை பார்த்திருக்கிறார்.
வெள்ளை தாடி, பச்சை நிற ஆடை, பாகிஸ்தான் கொடி என அனைத்து பாகிஸ்தான் போட்டிகளிலும் மைதானத்தில் அப்துல் ஜலீல் காட்சி அளிப்பார். இந்திய ரசிகர்களுடனும் நட்புறவை வைத்திருக்கும் அப்துல் ஜலீல், இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை தொடர்ந்து விளையாட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
பாகிஸ்தான் வீரர்கள் ரசிகர்கள் என பலரும் அப்துல் ஜலீலுக்கு உதவிகளை செய்திருக்கிறார்கள். கிரிக்கெட்டா சோறு போடுது என கேட்ட பலருக்கும் தற்போது இவர் கூறும் பதில் ஆம் கிரிக்கெட் தான் எனக்கு சோறு போடுகிறது என்பதுதான்.