பிக்பாஸ் விருந்தில் புறக்கணிக்கப்பட்டாரா அர்ச்சனா?

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜனவரி 14-ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.

ஜனவரி 20, 2024 - 11:11
பிக்பாஸ் விருந்தில் புறக்கணிக்கப்பட்டாரா அர்ச்சனா?

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜனவரி 14-ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.

இதில் முதன்முறையாக வைல்டு கார்டு போட்டியாளர் அர்ச்சனா டைட்டிலை வென்றார். மணிசந்திரா ரன்னராக 2-வது இடம் பிடித்தார்.

இந்த நிலையில் அர்ச்சனா டைட்டில் வென்றது குறித்து தற்போது ஏகப்பட்ட சர்ச்சைகள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக வெளியில் பிஆர் டீம் வைத்து விட்டு நிகழ்ச்சிக்கு சென்ற அர்ச்சனா டைட்டில் வென்றதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என, பிக்பாஸ் டைட்டிலை அர்ச்சனா வாங்கும் போதே சலசலப்புகள் எழுந்தனவாம்.

மேலும் அவர் நிகழ்ச்சிக்கு எந்தவொரு கண்டெண்டும் பெரிதாக கொடுக்கவில்லை என்றும் எதிர்ப்புக் குரல்கள் வலுத்ததாக கூறப்படுகிறது.

உச்சகட்டமாக இறுதிப்போட்டி ஷூட்டிங் முடிந்து போட்டியாளர்கள் அனைவருக்கும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விருந்து அளிக்கப்பட்டுள்ளது.

இதில் அர்ச்சனா தவிர அனைவருமே கலந்து கொண்டுள்ளனர். அதாவது அர்ச்சனா கவனமாக தவிர்க்கப்பட்டிருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இயங்கி வருகின்றனர். ஆனால் அர்ச்சனா இன்னும் அந்த பக்கமே எட்டி பார்க்கவில்லை.

இதனால் இந்த டைட்டிலுக்கு பின்னர் ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஒரு தரப்பினர் அர்ச்சனாவை கேள்வி கேட்கும் அதே நேரத்தில், இன்னொரு தரப்பினர் அர்ச்சனாவிற்கு ஆதரவாக கேள்வி எழுப்புகின்றனர்.

முதல் சீசன் ஆரவ் தொடங்கி அசீம் வரை இதற்கு முன்னால் டைட்டில் வின்னர்களுக்கு ஆதரவாகத் தான் பார்வையாளர்கள் இருந்தார்களா? என்பது தான் அவர்களின் முக்கியமான கேள்வியாக உள்ளது.

இந்த 7-வது சீசன் முடிந்தும் கூட இன்னும் சர்ச்சைகள் சுழன்றடித்தபடியே தான் உள்ளது. மேலும் சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் தொடர்ந்து இதுகுறித்து பதிவுகள் இட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!