ரோஹித்துக்கே ஆட்டம் காட்டிய இங்கிலாந்து வீரர்.. கிரிக்கெட்டில் நடந்த அற்புதம்!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. 

மார்ச் 9, 2024 - 14:05
ரோஹித்துக்கே ஆட்டம் காட்டிய இங்கிலாந்து வீரர்.. கிரிக்கெட்டில் நடந்த அற்புதம்!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. 

இந்திய அணிக்கு இந்த தொடரை வெல்வதிலும் அதிகம் சவாலாக இங்கிலாந்து அணி இருப்பார்கள் என்றும் கருதப்பட்ட நிலையில் அடுத்த மூன்று போட்டியில் தொடர்ந்து இந்திய அணி வெற்றி வாகை சூடி இருந்தது.

அதே வரிசையில் தற்போது நடைபெற்று வரும் கடைசி டெஸ்டிலும் இந்திய அணி வெற்றி பெற்று விடும் என்றே தெரிகிறது. முதல் இன்னிங்சில் அமர்க்களமாக பேட்டிங்கை தொடங்கி இருந்த இங்கிலாந்து அணி, நடுவே 5 விக்கெட்டுகளை 10 ரன்னுக்குள் இழக்க, 218 ரன்னில் ஆல் அவுட்டாகி இருந்தது. 

வழக்கம் போல பேஸ் பால் ஆட்டத்தை ஆடுவதா, டெஸ்ட் போட்டியை போல நிதானமாக ஆடுவதா என்ற குழப்பத்திலேயே இங்கிலாந்து வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததாக தான் அவரது பேட்டிங்கின் மூலம் தெரிய வருகிறது.

இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர்களான அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரும் சிறப்பாக பந்து வீச இங்கிலாந்து அணிகள் ரன்னடிக்கவே முடியாமல் போனது. 

இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் ஆடிவரும் இந்திய அணி, இரண்டாவது நாள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 473 ரன்கள் எடுத்துள்ளது. 

அப்படி ஒரு சூழலில் தான் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் யாரும் எதிர்பாராத ஒரு சம்பவத்தை செய்து கிரிக்கெட் அரங்கத்தில் அற்புதம் நிகழ்த்தி காட்டியுள்ளார் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். 

சில காயம் காரணமாக கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக எந்த ஒரு போட்டிகளிலும் பந்து வீசாமல் இருந்து வந்தார் ஸ்டோக்ஸ்.

இதற்கிடையே இந்த தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு பின்னர் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்ட ஸ்டோக்ஸ், விரைவில் பந்து வீசுவார் என கருதப்பட, ஐந்தாவது டெஸ்டிலும் அது நடந்தது. ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்த பின்னர் கில் மற்றும் ரோகித் ஆகியோர் சிறப்பாக அடி சதம் அடித்திருந்தனர். 

அப்படி ரோகித் 103 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது எட்டு மாதங்கள் கழித்து ஒரு கிரிக்கெட் போட்டியில் ஸ்டோக்ஸ் வீசிய முதல் பந்தியிலேயே ரோஹித்தை போல்ட் எடுத்து பட்டையை கிளப்பி இருந்தார். 

இதனை லைவாக கண்ட கிரிக்கெட் ரசிகர்கள், ஸ்டோக்ஸின் பந்து வீச்சை கண்டு ஒரு நிமிடம் மிரண்டு தான் போனார்கள்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!