செல்பியால் சிக்கிய போதைப்பொருள் கடத்தல் வியாபாரி

இங்கிலாந்து நாட்டில் உள்ள எசெக்ஸ் பகுதியை சேர்ந்தவர் டேரன் ஸ்டிர்லிங். 58 வயதான இவர் மீது போதைப்பொருள் விநியோகம் செய்த வழக்குகள் உள்ளன. 

நவம்பர் 25, 2023 - 23:58
செல்பியால் சிக்கிய போதைப்பொருள் கடத்தல் வியாபாரி

இங்கிலாந்து நாட்டில் உள்ள எசெக்ஸ் பகுதியை சேர்ந்தவர் டேரன் ஸ்டிர்லிங். 58 வயதான இவர் மீது போதைப்பொருள் விநியோகம் செய்த வழக்குகள் உள்ளன. 

இந்த வழக்குகளில் தலைமறைவாக இருந்த அவரை பொலிஸார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் அண்மையில் ஸ்டிர்லிங் ஆன்லைனில் சட்ட விரோதமான பொருட்களை பரிமாறி கொள்வதற்காக பயன்படுத்தப்படும் என்க்ரோசாட் தளத்தில் தனது 'செல்பி' புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 

அதில், அவர் ஒரு கப்பலில் மேல் சட்டை அணியாமல் இருந்தார். இதற்கிடையே பொலிஸார் ஸ்டிர்லிங்கை பிடிப்பதற்காக என்க்ரோசாட் தளத்தை கண்காணித்து வந்த நிலையில் ஸ்டிர்லிங் தனது செல்பி புகைப்படத்தை பகிர்ந்ததை கண்ட பொலிஸார் அதன் மூலம் அவரது இருப்பிடத்தையும் கண்டுபிடித்தனர்.

அதன்படி கப்பலில் பதுங்கி இருந்த அவரை பொலிஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஏராளமான அலைபேசிகள் மற்றும் கஞ்சா, நூற்றுக்கணக்கான போதை மாத்திரைகள், சிக்னல் ஜாமர் கருவி ஆகியவற்றையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!