பந்துல லால் பண்டாரிகொட எம்.பியாக சத்தியப்பிரமாணம்
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட உறுப்பினர் பந்துல லால் பண்டாரிகொட, நாடாளுமன்ற உறுப்பினராக இன்று (21) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார பதவி நீக்கம் செய்யப்பட்டதன் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்தையே அவர் நிரப்பினார்.
மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்ய ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டப்பூர்வமானது என உயர் நீதிமன்றம் கடந்த 9ஆம் திகதி தீர்ப்பளித்தது.
தமது கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.