25 விரலுடன் பிறந்த அதிசிய குழந்தை; வைத்தியர்கள் கூறிய தகவல்!
அங்கு பாரதிக்கு அழகிய ஆண் குழந்தையும் பிறந்த நிலையில், கை-கால்களில் சேர்த்து 25 விரல்கள் இருந்துள்ளன.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட்டை மாவட்டம், பன்ஹாட்டி பகுதியில் வசித்துவரும் நபர் குருப்பா கோனூர். இவரின் மனைவி பாரதி (வயது 35).
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதிக்கு பிரசவ வலி ஏற்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
அங்கு பாரதிக்கு அழகிய ஆண் குழந்தையும் பிறந்த நிலையில், கை-கால்களில் சேர்த்து 25 விரல்கள் இருந்துள்ளன.
இதனைக்கண்டு பூரிப்படைந்துபோன குடும்பத்தினர், கடவுள் அருளால் தங்களின் மகன் பிறந்துள்ளதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த விஷயம் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், பொதுவாக குழந்தைகள் பிறக்கும்போது, அவர்களின் கைகள் அல்லது கால்களில் கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு விரல்கள் கூடுதலாக இருக்கும்.
அது அரிதான நிகழ்வாகவும் கவனிக்கப்படுகிறது. ஆனால், இவ்வாறான விஷயம் அரிதிலும் அரிது. இதனை மருத்துவ நிலையில் பாலிடாக்டிலி என்ற அரிய நிலையாக கூறுவார்.
குரோமோசோம்களில் ஏற்படும் மாற்றம் காரணமாக இவ்வாறான நிகழ்வு நடைபெற்றுள்ளது. குடும்பத்தினர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். தாயும்-சேயும் நலமுடன் இருக்கிறார்கள் என தெரிவித்தனர்.