நாங்கள் தவறு செய்து விட்டோம்... உலகக்கிண்ண தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன்

டி20 உலகக்கிண்ணத் தொடரில் நாங்களும் ஏமாற்றமடைந்துள்ளோம் என பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். 

ஜுன் 18, 2024 - 10:49
நாங்கள் தவறு செய்து விட்டோம்... உலகக்கிண்ண தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன்

டி20 உலகக்கிண்ணத் தொடரில் நாங்களும் ஏமாற்றமடைந்துள்ளோம் என பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். 

நடப்பு டி20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி 2 வெற்றிகள், 2 தோல்வி அடைந்ததால் 4 புள்ளிகளை மட்டுமே பெற்றது. இதனால் தமது குழுவில் 3வது இடத்தைப் பிடித்ததால் தொடரை விட்டு வெளியேறியது. 

இந்த நிலையில் அணித்தலைவர் பாபர் அசாம் தோல்விக்கான காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். 

அவர் கூறுகையில், ''நீங்கள் அனைவரும் எவ்வளவு ஏமாற்றமடைந்துள்ளீர்களோ, அதே அளவு நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம். ஒரு நபரால் நாங்கள் தோற்றோம் என்பது அல்ல. ஆனால் ஒரு அணியாக நாங்கள் இழந்தோம். கேப்டன்சி குறித்து சிந்திக்கவில்லை.

நான் திரும்பி செல்லும்போது இங்கு நடந்த அனைத்து விடயங்களையும் விவாதிப்போம். அவர்கள் எனக்கு கேப்டன் பதவியை திரும்ப கொடுத்த அந்த முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட் சபையுடையது. இது 15 வீரர்களின் தவறு. நாங்கள் அனைவரும் தவறு செய்தோம்'' என்றார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!