இறுதி பந்துவரை பீதியை கிளப்பிய நியுஸிலாந்து வீரர்.. கடைசி 2 பந்தில் ட்விஸ்ட்!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் தர்மஸாலாவில் மோதின.

ஒக்டோபர் 28, 2023 - 22:41
இறுதி பந்துவரை பீதியை கிளப்பிய நியுஸிலாந்து வீரர்.. கடைசி 2 பந்தில் ட்விஸ்ட்!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் தர்மஸாலாவில் மோதின.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் அதிரடியான ஆரம்பத்தை கொடுத்தனர்.

இருவரும் 81 மற்றும் 109 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 36 ஓட்டங்களையும் ஸ்மித் மற்றும் லபுஷேன் தலா 18 ஓட்டங்களை அடித்து ஆட்டமிழந்தனர்.

மேக்ஸ்வெல் 41 ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்ப, இங்லிஸ் 38 ஓட்டங்களை அடித்தார். இதன் மூலம் அவுஸ்திரேலியா அணி 49.2 ஓவர்களில் 388 ஓட்டங்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

நியூஸிலாந்து சார்பில் கிளென் பிலிப்ஸ், போல்ட் தலா 3 விக்கெட்டுகளையும், சான்ட்னர் 2 விக்கெட்டுகளையும், நீஷம், மேட் ஹென்றி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

கடின இலக்கை துரத்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய நியுஸிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான டெவான் கான்வே 28 ஓட்டங்களையும், யங் 32 ஓட்டங்களையும் குவித்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா அதிரடியாக விளையாடி 89 பந்துகளில் 116 ஓட்டங்களை குவித்தார். இவருடன் ஆடிய டேரில் மிட்செல் 54 ஓட்டங்களையும், அணித் தலைவர் டாம் லேத்தம் 21 ஓட்டங்களை எடுத்தனர்.

இவர்களை தொடர்ந்து களமிறங்கிய கிளென் பிலிப்ஸ் 12 ஓட்டங்களில் ஆட்டமிழக்க ஜேம்ஸ் நீஷம் பொறுப்பாக ஆடி அரைசதம் விளாசினார்.

மிட்செல் சாண்ட்னர் 17 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் நியூஸிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 383 ஓட்டங்களை குவித்தது. இதன் மூலம் அவுஸ்திரேலியா அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!