டி20 கிரிக்கெட்: உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா; குறைந்த பந்துகளில் 1,000 ரன்கள்
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிது. இதில் முதல் மற்றும் 5ஆவது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது, இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வெற்றிக் கொண்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிது. இதில் முதல் மற்றும் 5ஆவது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது, இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வெற்றிக் கொண்டுள்ளது.
இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி, ஆஸ்திரேலிய பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. மழையால் பாதியிலேயே கைவிடப்பட்டது
இந்த ஆட்டத்தில் அபிஷேக் சர்மா 11 ரன்கள் அடித்திருந்தபோது, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1,000 ரன்கள் மைல்கல்லை எட்டினார். இந்த 1,000 ரன்களை அவர் வெறும் 528 பந்துகளில் அடித்துள்ளார்.
இதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 1,000 ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார்.
இந்தச் சாதனையை இதற்கு முன்னர் குறைந்த பந்துகளில் எட்டிய வீரர்கள் பட்டியல்:
1. அபிஷேக் சர்மா - 528 பந்துகள்
2. சூர்யகுமார் யாதவ் - 573 பந்துகள்
3. பில் சால்ட் - 599 பந்துகள்
4. கிளென் மேக்ஸ்வெல் - 604 பந்துகள்
5. ஆந்த்ரே ரசல்/ பின் ஆலன் - 609 பந்துகள்
மேலும், அபிஷேக் சர்மா 28 இன்னிங்ஸ்களில் 1,000 ரன்கள் அடித்துள்ளார். இதன் மூலம், குறைந்த இன்னிங்ஸ்களில் 1,000 ரன்கள் அடித்த 2-வது இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இந்தச் சாதனையில் விராட் கோலி 27 இன்னிங்ஸ்களுடன் முதலிடத்தில் உள்ளார்.