பிரேசில் நெடுஞ்சாலையில் பஸ் கவிழ்ந்து 9 பேர் மரணம்

பிரேசிலின் வடகிழக்குப் பகுதியில் நெடுஞ்சாலையில் பயணித்த பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

ஏப்ரல் 12, 2024 - 18:03
பிரேசில் நெடுஞ்சாலையில் பஸ் கவிழ்ந்து 9 பேர் மரணம்

பிரேசிலின் வடகிழக்குப் பகுதியில் நெடுஞ்சாலையில் பயணித்த பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

ரியோ டி ஜெனீரோவிலிருந்து போர்ட்டோ செகுரோவுக்குச் சென்றுகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

பஸ்ஸில் 34 பேர் பயணித்த நிலையில், காயமுற்றவர்களின் நிலை குறித்து தகவல் இல்லை. 

அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியிடப்படவிலை.

பஸ்ஸில் 2 ஓட்டுநர்கள் இருந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் எந்தக் காயமும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகில் மிகப் பெரிய நிலப் பரப்பளவைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ள பிரேசில், தரைப் போக்குவரத்து வசதியை அதிகம் நம்பியிருக்கிறமை குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!