அஸ்வெசும கொடுப்பனவு நாளை வைப்பிலிடப்படும்!
இதன்படி 1,406,932 குடும்பங்களுக்கான 8,775 மில்லியன் ரூபாய் திறைசேரியில் இருந்து வங்கிக் கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்படவுள்ளது.

அஸ்வெசும சமூக நலன்புரி திட்டத்தின் கீழ், ஒக்டோபர் மாதத்திற்கான கொடுப்பனவுகள், நாளை (05) முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இது குறித்த தகவல்களை, தனது உத்தியோகபூர்வ X (டுவிட்டர்) தளத்தில் நிதி இராஜாங்க அமைச்சர் பதிவிட்டுள்ளார்.
இதன்படி 1,406,932 குடும்பங்களுக்கான 8,775 மில்லியன் ரூபாய் திறைசேரியில் இருந்து வங்கிக் கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்படவுள்ளது.
இதையும் படிங்க : அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் புதிய அறிவிப்பு வெளியானது
இதேவேளை, மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் பரிசீலனை செய்யப்பட்ட தெரிவு செய்யப்பட்டோருக்கு ஜூலை மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் நிதி வழங்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.