‘அஸ்வெசும’ இரண்டாம் கட்ட பயனாளிகளுக்கு அதிரடி அறிவிப்பு

இரண்டாம் கட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு, இதுவரை வங்கிக் கணக்கு திறக்காத பயனாளிகள், உடனடியாக தமது பிரதேச செயலகத்திற்குச் சென்று வங்கிக் கணக்குகளைத் திறப்பது தொடர்பான கடிதத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஒக்டோபர் 29, 2025 - 16:13
‘அஸ்வெசும’ இரண்டாம் கட்ட பயனாளிகளுக்கு அதிரடி அறிவிப்பு
ai generated image

‘அஸ்வெசும’ தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபை அதிரடியான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

‘அஸ்வெசும’ நலன்புரி நன்மைகள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு தகுதி பெற்றிருந்தும், இதுவரை வங்கிக் கணக்குகளைத் திறக்காத பயனாளிகளின் பெயர் பட்டியல் பிரதேச செயலகங்களில் (Divisional Secretariats) காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு, இதுவரை வங்கிக் கணக்கு திறக்காத பயனாளிகள், உடனடியாக தமது பிரதேச செயலகத்திற்குச் சென்று வங்கிக் கணக்குகளைத் திறப்பது தொடர்பான கடிதத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அந்தக் கடிதத்தை மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை வங்கி அல்லது பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுள் தமக்கு வசதியான வங்கிக் கிளையொன்றில் சமர்ப்பித்து, அவர்கள் 'அஸ்வெசும' பயனாளி வங்கிக் கணக்கொன்றை திறக்க வேண்டும் எனவும் குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்குகளைத் திறக்காத தகுதிபெற்ற பயனாளிகள், விரைவில் இந்த வங்கிக் கணக்குகளைத் திறந்து, குறித்த வங்கிக் கணக்கு விபரங்களை பிரதேச செயலகங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அந்த அறிவித்தல் மூலம் அறியப்படுத்தப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!