அஸ்வெசும 2 ஆம் கட்டம் ஆரம்பம்.. வெளியான அறிவிப்பு
அஸ்வெசும பயனாளிகளின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அந்தந்த மாவட்ட செயலாளர் அலுவலக அதிகாரிகளால் ஆராயப்படும்

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்ட பயனாளர் தெரிவுக்கு விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை எதிர்வரும் ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதனை, சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், அஸ்வெசும பயனாளிகளின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அந்தந்த மாவட்ட செயலாளர் அலுவலக அதிகாரிகளால் ஆராயப்படும் என சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் கமல் பத்மசிறி குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள பிரச்சினைகளை மையப்படுத்தி தீர்வு காண்பதற்காக இன்று (06) முதல் ஆரம்பிக்கப்படவுள்ள விசேட வாரத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.