13 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா, இலங்கை மோதல்.. வரலாற்றை பாருங்க!
இந்த எட்டு முறைகளில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் ஒன்பதாவது முறையாக இறுதிச்சுற்றில் பங்கேற்கிறது. உலக கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் ஆட்டம் பட்டையை கிளப்பும்.
ஆனால் ஆசிய கோப்பை வரலாற்றில் இவ்விரு அணிகளும் ஒருமுறை கூட இறுதிப் போட்டியில் மோதியது கிடையாது. ஆனால் இந்தியாவும் இலங்கையும் இதுவரை எட்டு முறை இறுதி போட்டியில் மோதி இருக்கின்றன.
இந்த எட்டு முறைகளில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது.
இதில் ரவுண்ட் ராபின் முறைப்படி நடைபெற்ற இந்த தொடரில் இந்திய அணி முதல் இடத்திலும் இலங்கை இரண்டாவது இடத்திலும் பெற்றது. 1986 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இலங்கையை வீழ்த்தி இந்தியா இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதேபோன்று 1990 ஆம் ஆண்டு இலங்கையை இந்தியா தோற்கடித்து மூன்றாவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது. இதை போன்று 1995 ஆம் ஆண்டும் இலங்கையை தோற்கடித்து இந்தியா நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இதன்பிறகு 1997 ஆம் ஆண்டு இந்தியாவை வீழ்த்தி இலங்கை இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இதேபோன்று 2004 ஆம் ஆண்டு இந்தியாவை எதிர்கொண்ட போது இலங்கை அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்பிறகு 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரிலும் இறுதிப்போட்டியில் இந்தியாவை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.
அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் இலங்கையை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
அதன் பிறகு இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதி கொள்ளவே இல்லை. 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் இரு அணிகளும் பைனலில் மோதுகிறார்கள்.
இதில் இந்திய அணி ஏழு முறையும், இலங்கை ஆறுமுறையும் ஆசிய கோப்பையை வென்றிருக்கிறார்கள். இந்த தொடரில் இலங்கை வெற்றி பெற்றால் இந்தியாவை சமன் செய்து விடும் வாய்ப்பு இருக்கிறது.