இன்று மழை பெய்யக்கூடிய பிரதேசங்கள் - வானிலை தொடர்பான அறிவிப்பு
நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்ய்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சில இடங்களில் 50 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது 50-55 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கிலிருந்து தென்மேற்கு திசையில் வீசுவதுடன் காற்றின் வேகமானது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும்.
மீனவ மற்றும் கப்பல் போக்குவரத்து சமூகம் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.