கிழக்கு ஆளுநரின் சர்வதேச விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் நியமனம்

கிண்ணியாவை சேர்ந்த  ஏ.எல்.எம்.லாபீர், இலங்கை வெளிவிவகார செயலகத்தில் 25 வருடம் சேவையாற்றியுள்ளதோடு, தாய்லாந்து, கனடா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இராஜதந்திரியாகவும் செயற்பட்டுள்ளார். 

ஜுலை 10, 2023 - 16:10
கிழக்கு ஆளுநரின் சர்வதேச விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் நியமனம்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் சர்வதேச விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளராக சட்டத்தரணி ஏ.எல்.எம்.லாபீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியமனக் கடிதத்தை, திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து ஆளுநர் வழங்கிவைத்தார்.

திருகோணமலை - கிண்ணியாவை சேர்ந்த  ஏ.எல்.எம்.லாபீர், இலங்கை வெளிவிவகார செயலகத்தில் 25 வருடம் சேவையாற்றியுள்ளதோடு, தாய்லாந்து, கனடா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இராஜதந்திரியாகவும் செயற்பட்டுள்ளார். 

இறுதியாக அவர் ஜோர்தான் நாட்டில் இலங்கைக்கைகான தூதுவராக 4 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

(ஹஸ்பர்)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!