இலங்கையின் புதிய ஜனாதிபதியானார் அநுரகுமார திஸாநாயக்க
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க (55 வயது) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க (55 வயது) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இது இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு புதிய மற்றும் தீர்க்கமான அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்துள்ளது.
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடனான போட்டியில் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
இதுவரை இல்லாதவகையில் இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் பின்னர் புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவி நிறைவுக்கு வந்துள்ளது.