பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மற்றுமொரு அறிவித்தல்
நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலை மாணவர்களை வெளி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.

நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலை மாணவர்களை வெளி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.
எனினும், இன்றும் பாடசாலை மாணவர்கள் விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.
இதன் காரணமாக கல்வி அமைச்சு மீண்டும் அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அதிபர்களின் பொறுப்பு என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கடும் வெப்பமான காலநிலை இன்னும் சில மாவட்டங்களுக்கு அபாய நிலையில் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்றும் (13) கொழும்பு மாவட்டத்தில் கிட்டத்தட்ட 35 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் புத்தளம் மாவட்டத்தில் அதிகூடிய வெப்பநிலையாக 37.9 செல்சியஸ் பாகையாக பதிவாகியுள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் வவுனியா, மன்னார் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று ஆபத்தான வெப்பமான காலநிலை நிலவியமை குறிப்பிடத்தக்கது.