நபரொருவர் அடித்துக் கொலை; சந்தேகநபர் தப்பியோட்டம்
எலபாத்த ஹல்தோல, கரங்கொட பிரதேசத்தில் நேற்றிரவு (20) நபர் ஒருவர் மற்றுமொரு நபரை இரும்பினால் அடித்துக் கொன்றுள்ளார்.

எலபாத்த ஹல்தோல, கரங்கொட பிரதேசத்தில் நேற்றிரவு (20) நபர் ஒருவர் மற்றுமொரு நபரை இரும்பினால் அடித்துக் கொன்றுள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கொலையை செய்த சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை எலபாத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.