பாடசாலை நடவடிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை காரணமாக பாடசாலை விடுமுறை, வழங்கப்பட்டிருந்தது

பெப்ரவரி 5, 2024 - 14:19
பாடசாலை நடவடிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று (05) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை காரணமாக பாடசாலை விடுமுறை, கடந்த டிசெம்பர் மாதம் 23ஆம் திகதியிலிருந்து, பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை வழங்கப்பட்டிருந்தது.

விவசாய பாடத்திற்கான வினாத்தாள் முன்னதாகவே வெளியானதையடுத்து, அந்த பாடத்திற்கான பரீட்சையை பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மீண்டும் நடத்த பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அதற்கமைய, இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நாடளாவிய ரீதியில் இன்று மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகி உள்ளன.

 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!