பேக்கரி உற்பத்திகளின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாண் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விற்பனை விலை 200 ரூபாயாக காணப்படுகின்றது.

ஜுலை 19, 2023 - 18:00
ஜுலை 19, 2023 - 18:00
பேக்கரி உற்பத்திகளின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

கோதுமை மாவின் விலை குறைந்துள்ள போதிலும், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று(18) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அனைத்து வகையான கோதுமை மா விலைகளும் 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதாக பிரீமா நிறுவனம் அறிவித்தது. 

அதற்கமைய, பாண் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விற்பனை விலை 200 ரூபாயாக காணப்படுகின்றது.

எனினும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் குறைக்கப்பட்டதால் அவற்றின் விலைகளை மீண்டும் குறைப்பதற்கான இயலுமை இல்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்  என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு, கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டாக அறிவிக்கப்பட்டாலும், பல இடங்களில் அது நடைமுறைக்கு வரவில்லை என நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!