உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று(05) எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்ட மூலம் தொடர்பில் எதிர்வரும் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் விவாதத்தை மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் இன்னமும் கிடைக்கவில்லை என சபாநாயகர் அறிவித்துள்ளார்.