11 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை; வெளியான அறிவிப்பு

பொசன் பண்டிகையை முன்னிட்டு 11 பாடசாலைகளுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜுன் 11, 2024 - 15:35
ஜுன் 11, 2024 - 15:41
11 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை; வெளியான அறிவிப்பு

பொசன் பண்டிகையை முன்னிட்டு 11 பாடசாலைகளுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கே விடுமுறை வழங்கவுள்ளதாக வடமத்திய மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளி மாகாணங்களில் இருந்து  விசேட பாதுகாப்பு கடமைகளுக்காக வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இவ்வாறு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி கீழ்வரும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

  1. அநுராதபுரம் உயர்தரப் பாடசாலை
  2. ஸ்வர்ணபாலி தேசிய பாடசாலை
  3. வலிசிங்க ஹரிச்சந்திர உயர் பாடசாலை
  4. நிவட்டகச்சேதிய தேசிய பாடசாலை
  5. ஸாஹிரா தேசிய உயர் பாடசாலை
  6. தேவனம்பியதிஸ்ஸபுர உயர் பாடசாலை
  7. மகாபோதி உயர் பாடசாலை
  8. மிஹிந்தலை உயர் பாடசாலை
  9. மிஹிந்தலை கம்மலக்குளம கல்லூரி
  10. தந்திரிமலை பாடசாலை
Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!