மாதத்தின் முதல்நாள் மின்துண்டிப்பு தொடர்பான அறிவிப்பு!
இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, அனுமதி வழங்கியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தின் முதல் நாளான நாளை(01) நாட்டில் தினம் 12 மணிநேர மின்தடை அமுலாக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, அனுமதி வழங்கியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ABCDEFஇல் அதிகாலை 4 மணி முதல் - காலை 6 வரை 2 மணிநேரமும், காலை 8 மணி முதல் - மதியம் 12 வரை 4 மணிநேரம், மாலை 4 மணி முதல் - இரவு 10 மணி வரை 6 மணிநேரம், GHIJKL இல் காலை 6 - 8 மணி வரை 2 மணிநேரம் மின்வெட்டு அமுலில் இருக்கும்.
மதியம் 12 மணி முதல் - மாலை 4 மணி வரை 4 மணிநேரமும், மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 6 மணிநேரம், PQRS இல் அதிகாலை 4 மணி முதல் காலை 6 மணி வரை 2 மணிநேரம், காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை 4 மணிநேரமும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை 6 மணிநேரம் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது.