மதுபானசாலைகளுக்கு 14 நாட்கள் பூட்டு - வெளியான அறிவிப்பு
மதுபானசாலைகளை எதிர்வரும் ஜுலை மாதம் 4ம் திகதி வரை மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

மதுபானசாலைகளுக்கு 14 நாட்கள் பூட்டு
மதுபானசாலைகளை எதிர்வரும் ஜுலை மாதம் 4ம் திகதி வரை மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, கதிர்காமம் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள மதுபானசாலைகளே இவ்வாறு மூடப்படவுள்ளன.
கதிர்காமம் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், திருவிழாவுக்கு வரும் பக்தர்கள், குறித்த பிரதேசத்துக்குள் மதுபானங்களை கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சோதனை நடவடிக்கைகளில், ஊவா மாகாண மதுவரித் திணைக்கள அதிகாரிகள், கதிர்காமம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடமைகளுக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது. (News21.lk)