மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று(2) வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை விட மிக அதிகமாக காணப்படலாம் என்று வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மார்ச் 2, 2024 - 16:05
மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

தற்போதைய கடும் வெப்பமான காலநிலை காரணமாக  நீரிழப்பு, தசைப்பிடிப்பு மற்றும் தீவிர சோர்வு போன்ற நோய் நிலைமைகள் ஏற்படக் கூடிய சாத்தியம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அத்துடன், நாட்டின் பல பகுதிகளில் இன்று(2) வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை விட மிக அதிகமாக காணப்படலாம் என்று வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேல், தென், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் இன்று கடும் வெப்பமான கால நிலை நிலவக் கூடும் என  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த பகுதிகளில் மனித உடலில் உணரக் கூடிய எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிக வெப்பநிலை பதிவாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுவெளியில் அதிகமாக நடமாடுவதை குறைத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!