இங்கிலாந்து நடிகருடன் எமி ஜாக்சன் திருமணம்

தமிழ் சினிமாவில் மதராசபட்டனம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான எமி ஜாக்சன், தாண்டவம், ஐ, கெத்து, தெறி, எந்திரன்  உள்ளிட்ட படங்களில் நடத்து உள்ளார்.

ஆகஸ்ட் 26, 2024 - 11:02
இங்கிலாந்து நடிகருடன் எமி ஜாக்சன் திருமணம்

தமிழ் சினிமாவில் மதராசபட்டனம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான எமி ஜாக்சன், தாண்டவம், ஐ, கெத்து, தெறி, எந்திரன்  உள்ளிட்ட படங்களில் நடத்து உள்ளார்.

இந்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சன் தொழிலதிபர் ஜார்ஜூடனை காதலித்து வந்தார். திருமணம் ஆகாமலேயே இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. 

பின்பு கருத்து வேறுபாட்டால் அவர்களுக்குள் கடந்த ஆண்டு பிரிவு ஏற்பட்டது. தனது மகன் ஆண்ட்ரியாசுடன் தனியாக வாழ்ந்து வந்த எமி ஜாக்சன் இங்கிலாந்து நடிகர் எட்வர்டு வெஸ்ட்விக்கை காதலித்து வந்தார்.

இந்நிலையில், காதலன் எட்வர்டு வெஸ்ட்விக்கை நடிகை எமி ஜாக்சன் திருமணம் செய்துகொண்டார். இருவரின் திருமணம் இத்தாலி நாட்டின் அமல்ஹி கடற்கரை பகுதியில் நடைபெற்றது. 

எமி ஜாக்சனின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!