மற்றுமொரு மாகாண பாடசாலைகள் அனைத்துக்கும் இன்று விடுமுறை
சீரற்ற காலநிலை காரணமாக மாகாண ஆளுநரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (20) விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ சமரக்கோன் தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக மாகாண ஆளுநரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் கூறியுள்ளார்.
அத்துடன், 2024 ஆம் ஆண்டுக்கான 3, 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கான இறுதி தவணை பரீட்சைகளில் இன்றும் (20) நாளையும் (21) நடைபெறவிருந்த பரீட்சைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.