நசீர் அஹமட்டின் எம்.பி பதவிக்கு அலி சாஹிர் மௌலானா நியமனம்
பாராளுமன்ற உறுப்பினராக அலி ஸாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினராக அலி ஸாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
நசீர் அஹமட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமானதை அடுத்து, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அலி சாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளதாக விசேட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் உரிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, அமைச்சர் நசீர் அஹமட்டை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானம் செல்லுபடியாகும் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் அவரது பதவி வறிதானமை குறிப்பிடத்தக்கது.