இணையத்தில் சிறுவர்களின் ஆபாச காணொளிகள் அதிகரிப்பு
இணையதளத்தில் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி நாளாந்தம் இந்த சம்பவங்கள் குறித்த தகவல்களை பொலிஸார் பெற்று வருகின்றனர்.

வயது குறைந்த இலங்கையர்களை உள்ளடக்கிய ஆபாச காணொளிகள் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இணையதளத்தில் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி நாளாந்தம் இந்த சம்பவங்கள் குறித்த தகவல்களை பொலிஸார் பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக குறித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “இதுபோன்ற வழக்குகள் பற்றி தொடர்ந்து புகாரளிக்கப்படுவதுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது அத்தோடு சில வழக்குகள் மேலதிக ஆலோசனைக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இத்தகைய உள்ளடக்கத்தின் தோற்றத்தைக் கண்டறிவதற்கான நவீன தொழில்நுட்பமொன்று அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளது போல எங்களிடமும் ஒரு தரவுத்தளம் உள்ளது.
உலகில் வேறு இடங்களில் இதுபோன்ற வழக்குகள் கண்டறியப்பட்டவுடன் தரவுத்தளம் புதுப்பிக்கப்படும் அத்தோடு தொலைபேசிகளில் உள்ள வசதியைப் பயன்படுத்தி அத்தகைய உள்ளடக்கத்தைப் பகிர்ந்து கொண்டவுடன் உள்ளடக்கம் எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டறியும் தொழில்நுட்பமும் உள்ளது. அதற்கேற்ப எங்கள் தரவுத்தளத்தில் தகவல்களைப் புதுப்பிக்கிறோம்” என்றார்.
- Dailymirror.lk