A/L பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு; நாளை முதல் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்

இப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள், நாளை (26) முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

ஜுன் 26, 2025 - 22:45
A/L பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு; நாளை முதல் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை, நவம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள், நாளை (26) முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

அரச பாடசாலைகள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பாடசாலை அதிபர்கள் ஊடாகவும் தனியார் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை தாங்களாகவே ஒன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கெள்ளப்பட்டுள்ளது. 

தனியார் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது தங்கள் தேசிய அடையாள அட்டை (NIC) எண்ணைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள், இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஐ பார்வையிட்டு, அதற்கேற்ப தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!