பொதுவெளியில் பிரமாண்ட திரையில் ஆபாச படம்..  அதிர்ச்சியில் மக்கள்.. என்ன ஆச்சு தெரியுமா?

சிறிது நேரம் அந்த படம் பிரமாண்ட திரையில் ஓடியது. இதனை அப்பகுதியில் சென்று கொண்டிருந்த மக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அந்த மின்னணு பலகைக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 22, 2023 - 19:06
பொதுவெளியில் பிரமாண்ட திரையில் ஆபாச படம்..  அதிர்ச்சியில் மக்கள்.. என்ன ஆச்சு தெரியுமா?

ஈராக் தலைநகரம் பாக்தாதில் பல இடங்களில் பிரமாண்ட மின்னணு விளம்பர பலகைகள் உள்ளன. இவற்றை நிறுவி, செயல்படுத்துதை தனியார் நிறுவனங்கள் அங்கு கையாள்கின்றன.

இந்த விளம்பர பலகைகளில் வழக்கமாக வீட்டு உபயோக பொருட்களுக்கான விளம்பரங்களும், தேர்தல் நெருங்கும் நேரங்களில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் குறித்த செய்திகளும் மட்டுமே வெளியிடப்படும். 

பாக்தாத் நகரின் மைய பகுதிகளில் ஒன்று உக்பா இப்ன் நஃபியா சதுக்கம். இங்கும் ஒரு பிரமாண்ட மின்னணு விளம்பர பலகை உள்ளது. 

இதன் செயல்பாட்டை நிர்வகிக்கும் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர் ஒருவருக்கும் இந்த நிறுவனத்திற்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு இருந்து வந்தது.

நிறுவனத்தின் மீது கோபமுற்ற அந்த ஊழியர் அதிரடியாக ஒரு செயலை செய்தார். தனது மென்பொருள் ஹேக்கிங் திறமையால், மென்பொருள் பாதுகாப்பு கட்டுப்பாடுகளையும், தடைகளையும் மீறி, அந்த விளம்பர பலகையில் ஒரு ஆபாச படம் ஓடுமாறு செய்தார்.

சிறிது நேரம் அந்த படம் பிரமாண்ட திரையில் ஓடியது. இதனை அப்பகுதியில் சென்று கொண்டிருந்த மக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அந்த மின்னணு பலகைக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை அடுத்து பாக்தாத் நகரின் பெரும்பகுதி விளம்பர பலகைகளில் எந்த காட்சிகளும் ஒளிபரப்பப்படுவதை அதிகாரிகள் தடை செய்தனர். நீதிமன்ற ஒப்புதலை பெற்று, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, அந்த ஊழியரை காவல்துறை கைது செய்தது.

ஆனாலும், அந்த சதுக்கத்தின் அருகே வாகனங்கள் செல்லும் போது குறுகிய நேரத்திற்கு ஆபாச படம், விளம்பர பலகையில் தோன்றியதை எப்படியோ படமெடுத்த சிலர் அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அது பலரால் பகிரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!