உலகக் கிண்ண கிரிக்கெட் 2023 - நம்ப முடியல.. ஒரே கேட்ச்சால் கோட்டை விட்டோம்.. ஏமாற்றமா இருக்கு.. ஆப்கான் கேப்டன்!

உலகக் கிண்ண கிரிக்கெட் 2023: ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐந்து முறை சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணியை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தும் என ஒட்டுமொத்த 90ஸ் கிட்ஸும் காத்துக்கொண்டிருந்தார்கள்.

நவம்பர் 8, 2023 - 11:17
உலகக் கிண்ண கிரிக்கெட் 2023 - நம்ப முடியல.. ஒரே கேட்ச்சால் கோட்டை விட்டோம்.. ஏமாற்றமா இருக்கு.. ஆப்கான் கேப்டன்!

உலகக் கிண்ண கிரிக்கெட் 2023

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐந்து முறை சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணியை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தும் என ஒட்டுமொத்த 90ஸ் கிட்ஸும் காத்துக்கொண்டிருந்தார்கள்.

ஏனென்றால் 292 என்ற இலக்கை துரத்தும் போது ஆஸ்திரேலிய அணி 91 ரன்கள் சேர்ப்பதற்குள் ஏழு விக்கெட் இழந்து தடுமாறியது. இதனால் தோல்வி நிச்சயம் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை பரிசாக கொடுத்தார்.

ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் சேஸிங்கில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்ததுடன் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றியும் தேடி தந்தார். இதனால் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மற்றும் அந்த அணி வீரர்கள் மிகவும் ஏமாற்றத்துடன் பெவிலியன் சென்றார்கள். 

இந்த நிலையில் போட்டி முடிந்த பிறகு பேசிய ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் ஹஸ்மதுல்லா, கிரிக்கெட் எப்போதுமே ஒரு நகைச்சுவையான விளையாட்டு. நமக்கு அது ஏமாற்றத்தையும் கொடுக்கும் வெற்றியும் கொடுக்கும்.

ஆனால் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்திருக்கிறோம். மேக்ஸ்வெல் விளையாடிய ஆட்டம் கொஞ்சம் கூட எங்களால் நம்ப முடியவில்லை. சத்தியமாக நம்ப முடியவில்லை. ஏனென்றால் நாங்கள் ஆட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தினோம். 

எங்களுடைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றியின் அருகே கொண்டு சென்றார்கள். ஆனால் ஒரு கேட்ச் தவற விட்டது மூலம் எங்களுக்கு தோல்வி உறுதியானது.

அந்த கேட்ச் வாய்ப்பை விட்ட பிறகு மேக்ஸ்வெல் கொஞ்சம் கூட அவருடைய அதிரடி ஆட்டத்தை நிறுத்தவே இல்லை. கிரிக்கெட்டில் எந்தெந்த ஷாட் இருக்கிறதோ அதனை எல்லாம் அவர் விளையாடினார். 
அதற்காக நிச்சயமாக நாங்கள் அவரை பாராட்டுகிறோம். அந்த ஒரு கேட்ச்சை நாங்கள் பிடித்திருந்தால் ஆட்டம் வேறு மாதிரியாக மாறி இருக்கும்.

அந்த சம்பவத்திற்கு பிறகு மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடினால் எங்களுடைய பவுலர்களும் அவருடைய விக்கெட்டை வீழ்த்த பல முயற்சிகள் எடுத்தனர். ஆனால் அதன்பிறகு எங்களுக்கு அவர் ஒரு வாய்ப்பை கூட கொடுக்கவில்லை. 

எனினும் எங்களுடைய செயல்பாட்டை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். ஆனால் இறுதியில் எங்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது.இன்றைய ஆட்டம் இப்படி தான் போகும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை.

ஆனால் இதுதான் கிரிக்கெட். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான எங்களுடைய கடைசி ஆட்டத்தில் பலமான செயல்பாட்டை கொடுக்க நாங்கள் முயற்சி செய்வோம். இப்ராகிம் சாட்ரன் அவரை நினைத்து பெருமை கொள்ளலாம். 

நாங்களும் பெருமை கொள்கிறோம். ஏனென்றால் உலகக்கோப்பை தொடரில் சதம் அடித்த முதல் ஆப்கான் வீரர் என்ற பெயரை அவர் பெற்றிருக்கிறார் என்று ஹஸ்மதுல்லா பாராட்டினார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!