மகளின் வாழ்க்கைக்காக அமலா பாலை மிரட்டிய ரஜினி!
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர், நடிகை அமலா பால். மைனா, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலை இல்லாத பட்டதாரி, ராட்சஸன், ஆடை ஆகியப் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே தன் வசம் வைத்திருப்பவர்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர், நடிகை அமலா பால். மைனா, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலை இல்லாத பட்டதாரி, ராட்சஸன், ஆடை ஆகியப் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே தன் வசம் வைத்திருப்பவர்.
இந்நிலையில் வேலை இல்லாத பட்டதாரி திரைப்படத்தில் நடிகர் தனுஷூடன் அமலா பாலுக்கு ஏற்பட்ட நெருக்கம், திருமணத்தைத் தாண்டிய உறவாக மாறியது என ஊடகங்களில் கிசுகிசுக்கள் வெளியாகின. அதுவே, அமலா பாலை விவகாரத்து செய்ய, இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கு காரணமாக இருந்ததாகப் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இதனிடையே தனுஷ் - அமலா பாலின் நெருக்கம் ஒரு கட்டத்தில், தனுஷுக்குப் பெண் கொடுத்த மாமனாரான ரஜினி வரை சென்றுள்ளது. அப்போது தனது மகளின் வாழ்க்கைக்காக நடிகர் ரஜினி, அமலா பாலின் இல்லம் வரை சென்று மிரட்டியதாக மூத்த சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.
இதுகுறித்து ஒரு வலையொளி பக்கத்துக்கு மூத்த சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு அவர்கள் கூறியதாவது, 'அமலா பால், கேரளாவின் ஆலுவா பகுதியைச் சார்ந்த ஒரு சாதாரண மிடில் கிளாஸ் ஃபேமிலியைச் சார்ந்தவர். அவரது அம்மா, ஒரு அரசு காவலர், தனது மகளுக்குப் பிடித்த மாடலிங் துறைக்குச் செல்ல காரணமாக இருந்துள்ளார்.
எப்படியாவது தமிழ் சினிமாவில் வாய்ப்பு வந்துவிடாதா என அமலா பால் முயற்சித்தபோது, வீரசேகரன் என்னும் படத்தில் கமிட் ஆகியுள்ளார். அப்போது சென்னையில் படப்பிடிப்பு தளத்துக்கு ஆட்டோவில் வந்து அவரது அம்மாவுடன் இறங்கினார், அமலா பால்.
வீரசேகரன் படம் தோல்விப்படமானது. வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பின், சிந்து சமவெளி இயக்குநர் சாமி அமலா, பாலுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். படம் முடிந்து ரிலீஸ் ஆவதற்கு முன் பிரிவியூ காட்சி போடப்பட்டபோதுகூட, வெட்கப்பட்டுக்கொண்டு அமலா பால் யாருக்கும் தெரியாமல் போய் உட்கார்ந்துகொண்டார்.
படத்தை விமர்சகர்கள் குறை சொன்னாலும், அமலா பாலின் கண்கள் வசீகரிக்கும் வகையில் இருப்பதாகப் பலரும் கமெண்ட் செய்தனர். அடுத்து தமிழ் சினிமாவில் மைனா திரைப்படத்தில் அமலா பால் நடிக்க, அப்படம் ஹிட்டாக அமலா பாலுக்கு வாய்ப்புகள் வரத்துவங்கின. அடுத்து, தலைவா படத்தில் கமிட்டாகி உச்சத்துக்குச் சென்றார், அமலா பால்.
ஏ.எல். விஜய், மிகவும் ஒழுக்கமான மனிதர். பிரியதர்ஷனிடம் உதவி இயக்குநராக இருந்தவர். வசனங்களை நடிகைகளிடம் சொல்லித்தரும்போதுகூட, தலை குனிந்தபடி தான் சொல்லித்தருவார். இது அமலா பாலுக்கு மிகவும் பிடித்துவிட்டது.
தலைவா படம் ஹிட்டானதும், அப்படத்தை இயக்கிய ஏ.எல்.விஜய் மீது அமலா பாலுக்கு காதல் வருகிறது. பின், ஏ.எல்.விஜய்யும் காதலிக்கிறார். இக்காதலுக்கு ஏ.எல்.விஜய் வீட்டினர் ஆரம்பத்தில் எதிர்ப்புத் தெரிவித்தனர். பெண் வீட்டிலும் எதிர்ப்பு வருகிறது. எதிர்ப்புகளைமீறி, இருவரும் திருமணம் செய்துகொள்கின்றனர்.
திருமணத்திற்குப் பின்னும், அமலா பால் நடித்துக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் இரவு நேரத்தில் படப்பிடிப்பினை முடித்துவிட்டு வருவது, ஏ.எல்.விஜய் வீட்டில் தர்மசங்கடத்தைத் தருகிறது. ஏ.எல்.விஜய்யும் தனது தரப்பில், அவரை சமாதானம் செய்து நல்வழிப்படுத்த முயற்சிக்கிறார்.
அமலா பால், தனது இஷ்டம் தான் பெரிது என்று பிடிவாதமாக இருக்கிறார். பின், ஏ.எல்.விஜய் அமலா பாலிடம் மியூச்சுவல் விவாகரத்து கேட்கிறார். அதையடுத்து, அமலா பாலை தனது வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வந்துவிடுகிறார், அமலா பாலின் தாய்.
இதற்கு தனுஷின் சில்மிஷம் தான் காரணம். வேலை இல்லா பட்டதாரி படத்திற்குப்பின், ஒரு கட்டத்தில் அமலா பாலுடன் தனுஷ் தங்க ஆரம்பித்திருக்கிறார்.
இதையறிந்து ரஜினிகாந்த் அவர்கள் டென்ஷனாகி, அமலா பால் தங்கியிருந்த அப்பார்ட்மென்ட்க்குப் போய், ரஜினியின் இன்னொரு முகத்தைப் பார்க்க வைச்சிடாதீங்க, தனுஷ் ஒரு குடும்பஸ்தன், விட்டுடுங்க என தனது மகளுக்காகப் போய் எச்சரித்துள்ளார்.
இது அப்போது ஊடகத்தில் செய்தியாக கூட வந்தது. அதன்பிறகு, முற்றிலும் அமலா பால், தனுஷை விட்டுவிலகிட்டாங்க. அதன்பின் அவருக்குப் பெரிதளவில் வாய்ப்புகள் வரவில்லை. இதைத்தொடர்ந்து கேரளாவுக்குப் போயிடுறாங்க. நொந்துபோயிடுறாங்க. ஆன்மிகம் பக்கம் போயிட்டாங்க’ என்றார்.