இலங்கையில் இருந்து மியான்மாருக்கு மருத்துவக் குழுவை அனுப்ப நடவடிக்கை
மருத்துவக் குழுவொன்றை மியன்மாருக்கு அனுப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மருத்துவக் குழுவொன்றை மியன்மாருக்கு அனுப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மியன்மார் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் உரிய மருத்துவக் குழுவை அனுப்பிவைக்க தயார் என சுகாதார அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.
களுத்துறை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் குறிப்பிட்டுள்ளார்.