கறுப்புப் பட்டியலில் 120 வைத்தியர்களை சேர்க்க நடவடிக்கை
நாட்டை விட்டு வெளியேறிய 120 விசேட வைத்திய நிபுணர்களை கறுப்புப் பட்டியலில் இணைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டை விட்டு வெளியேறிய 120 விசேட வைத்திய நிபுணர்களை கறுப்புப் பட்டியலில் இணைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
வெளிநாடுகளுக்கு சென்று பணிக்கு திரும்பாத விசேட வைத்தியர்களே இவ்வாறு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மருத்துவர்கள் நாடு திரும்பிய பின்னர், மருத்துவ சிகிச்சைக்காக பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் முறையீடு செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
2022 ஜனவரி 09 மற்றும் 2023 ஆகஸ்ட் 18க்கு இடையில் 363 வைத்தியர்கள் வெளிநாடுகளில் பயிற்சிப்பெற்று இலங்கைக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எனினும், அவர்களில் 120 வைத்தியர்கள் மீண்டும் இடம்பெயர்ந்துள்ளதுடன் இலங்கையில் இருக்க வேண்டிய 29 மயக்க மருந்து நிபுணர்களில் 12 பேர் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர்.