கட்டுநாயக்கவில் விபத்து; இருவர் உயிரிழப்பு
விபத்தின் பின்னர் அப்பகுதியில் கூடிய மக்களால் பதற்றம் ஏற்பட்டதாகவும் எனினும், தாம் விரைந்து நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த அதிசொகுசு பஸ்ஸ டன் ஓட்டோ ஒன்று, கட்டுநாயக்க பகுதியில் வைத்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து, நேற்றிரவு (22) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
விபத்தின் பின்னர் அப்பகுதியில் கூடிய மக்களால் பதற்றம் ஏற்பட்டதாகவும் எனினும், தாம் விரைந்து நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.