யாழில் இளம் குடும்பஸ்தர் கடத்திச் செல்லப்பட்டு வெட்டிக்கொலை!
யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்ற கடத்திச் செல்லப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Colombo, March 12 ( News21 ) - யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்ற கடத்திச் செல்லப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை - மாவடி பகுதியை சேர்ந்த 23 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த குடும்பஸ்தரும் அவரது மனைவியும் காரைநகரில் இருந்து வட்டுக்கோட்டை - மாவடியில் உள்ள வீட்டுக்கு சென்று கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில் இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் நின்ற சிலர் அவர்களை வழி மறித்து கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.