அனைத்து வகையான சிம் அட்டைகளை பயன்படுத்துபவர்களுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அலைபேசிகளை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பெப்ரவரி 13, 2024 - 00:32
அனைத்து வகையான சிம் அட்டைகளை பயன்படுத்துபவர்களுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அலைபேசிகளை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் பணிப்பாளர் இன்று (12) ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நீங்கள் தற்போது பயன்படுத்தாத அலைபேசி நிறுவனங்களில் உங்கள் பெயரில் சிம் கார்டு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க தொலைபேசி நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

உங்களுக்குத் தெரியாமல் தொலைபேசிக் இலக்கங்கள் வழங்கப்பட்டிருந்தால், அவற்றை உடனடியாகத் துண்டிக்குமாறு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் கேட்டுக்கொண்டார்.

உங்கள் தேசிய அடையாள அட்டை எண்ணின் கீழ் உங்களுக்குத் தெரியாமல் சிம்ப்கள் வழங்கப்பட்டிருந்தால், அவற்றின் இணைப்பைத் துண்டிப்பது மிகவும் முக்கியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!