தொடரும் மழை தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பல ஆறுகளின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

செப்டெம்பர் 28, 2023 - 11:31
தொடரும் மழை தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டில் தற்போது பெய்து வரும் மழையால் பல ஆறுகளின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

பானந்துகம பிரதேசத்தில் இருந்து நில்வளா ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்து சிறியளவிலான வௌ்ளப்பெருக்கு நிலைமை எற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தலகஹகொட பிரதேசத்தில் உள்ள நில்வளா ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, அத்தனகலு ஓயாவின் நீர்மட்டமும் கனமழை காரணமாக அதிகரித்து வருவதாகவும், ஜிங் கங்கையின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதுடன், பத்தேகம, தவலம பிரதேசங்களில் அவதான மட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் களு கங்கையின் கிளை நதியான குடா கங்கையின் நீர் மட்டமும் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!