நாடு முழுவதும் மருத்துவமனைகளில் அடையாள வேலை நிறுத்தம்
07 கோரிக்கைகளை முன்வைத்து இன்று (24) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வைத்திய நிபுணர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

07 கோரிக்கைகளை முன்வைத்து இன்று (24) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வைத்திய நிபுணர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை 8:00 மணி முதல் 24 மணித்தியாலங்கள் வேலைநிறுத்தம் அமுல்படுத்தப்படும் என நிறைவுகாண் மருத்துவ தொழிற்சங்கவியலாளர்களின் கூட்டு ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
"எங்களிடம் 07 கோரிக்கைகள் உள்ளன. நாடு முழுவதும் இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டாலும், மகப்பேறு மருத்துவமனைகள், குழந்தைகள் மருத்துவமனைகள், புற்றுநோய் மருத்துவமனைகள், சிறுநீரக மருத்துவமனைகளை பாதிக்காது." என்றார்.
இந்த பணிப்புறக்கணிப்பிற்கு கதிரியக்க நிபுணர்கள், ஆய்வுகூட வல்லுனர்கள், ஒளடதவியலாளர்கள் உள்ளிட்ட பல துறையைச் சார்ந்தவர்கள் ஆதரவளிக்கவுள்ளனர்.