நாட்டில் இறைச்சி விலைகள் திடீரென அதிகரிப்பு
சீற்ற வானிலை காரணமாக மீன்பிடிக்க வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியதால் மீன் விலையும் உயர்ந்துள்ளது.

சீரற்ற வானிலையால் மீன் பிடித்தல் குறைவடைந்துள்ள நிலையில், உள்ளூர் சந்தையில் கோழி உள்ளிட்ட இறைச்சி வகைகளின் விலை அதிகரித்துள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.
சீற்ற வானிலை காரணமாக மீன்பிடிக்க வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியதால் மீன் விலையும் உயர்ந்துள்ளது.
இதனையடுத்து, உள்ளூர் இறைச்சி விலை அதிகரித்துள்ளது. அதன்படி, நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் புதிய கோழி 1,080. ரூபாயாகும்
அத்துடன், கோழி (தோல் இல்லாதது) 1,100 ரூபாய்க்கும், உறைந்த கோழி 1,100 ரூபாய்க்கும், கறி கோழி 1,100 ரூபாய்க்கும், ஆட்டிறைச்சி 3,300 ரூபாய்க்கும், மாட்டிறைச்சி 2,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.