வீட்டில் படித்துக் கொண்டிருந்த மாணவி மாயம்
வீட்டில் படித்துக் கொண்டிருந்த நிலையில் குறித்த மாணவி மாயமாகியுள்ளதாக பொலிஸ் நிலைய குற்றத்ததடுப்புப் பொலிஸார் கூறியுள்ளனர்.

புதிய காத்தான்குடி பிரதேசத்தில் தரம் 10இல் கல்வி பயிலும் 15 வயது மாணவி திடீரென காணாமல் போயிருப்பாதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் அவரது பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.
வீட்டில் படித்துக் கொண்டிருந்த நிலையில் குறித்த மாணவி மாயமாகியுள்ளதாக பொலிஸ் நிலைய குற்றத்ததடுப்புப் பொலிஸார் கூறியுள்ளனர்.
மாணவியின் தந்தை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் தாய் வீட்டு வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். வீட்டின் அறையொன்றினுள் குறித்த சிறுமி படித்துக் கொண்டிருந்துள்ளார்.
தாய் வந்து பார்த்தபோது மகளைக் காணவில்லை எனவும் வெளியில் ஓட்டோ ஒன்று சென்ற அடையாளம் தெரிந்ததாகவும் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த மாணவியை தேடும் பணிகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.