கிரிக்கெட் போட்டியால் ஏற்பட்ட மோதலில் மாணவன் பலி
நாவலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரு பாடசாலை மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தில் ஒரு மாணவர் மற்றைய மாணவனின் தலையில் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில், தாக்கப்பட்ட மாணவன் உயிரிழந்துள்ளார்.
நாவலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் 13 வயதுடைய பாடசாலை மாணவர் எனவும், தாக்குதலுக்கு உள்ளான 14 வயது மாணவனை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன், குறித்த மாணவன், நாவலப்பிட்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு மே 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.