பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
கடவுச்சீட்டு பிரச்சினையால் மக்கள் படும் துன்பங்களுக்கு தாம் வருத்தம் தெரிவிப்பதாக அமைச்சர் கூறினார்.

கடவுச்சீட்டு வழங்குவது தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடி ஒக்டோபர் 16ஆம் திகதிக்கு பின்னர் முடிவுக்கு வரும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதன்படி, கடவுச்சீட்டு பிரச்சினையால் மக்கள் படும் துன்பங்களுக்கு தாம் வருத்தம் தெரிவிப்பதாக அமைச்சர் கூறினார்.
இந்த நிலையில், நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடவுச்சீட்டு பற்றாக்குறை மற்றும் முன்பதிவு உள்ளிட்ட பிரச்சினைகளால் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.