ஜனாதிபதியால் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி
இரண்டு அரச நிறுவனங்கள் நிதி, பொருளாதார உறுதிப்பாடுகள் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

அதிவிசேட வர்த்தமானி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால், அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இரண்டு அரச நிறுவனங்கள் நிதி, பொருளாதார உறுதிப்பாடுகள் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
'சஹஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட்' மற்றும் தேசிய இயந்திர உபகரண நிறுவனம் ஆகியனவே இவ்வாறு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
'சஹஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட்' இதற்கு முன்னர் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் இருந்தது.
தேசிய இயந்திர உபகரண நிறுவனம் முன்னர் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.