பிரமுகர்களின் பாதுகாப்பு குறித்து இன்று சிறப்பு கலந்துரையாடல்
பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரமுகர்களின் பாதுகாப்பு தொடர்பில் இன்று (30) பிற்பகல் பொது பாதுகாப்பு அமைச்சில் விசேட கலந்துரையாடலொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள உயரதிகாரிகளுக்கு தற்போதுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்தும் அங்கு ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், விஐபி பாதுகாப்பு தொடர்பான சில சிறப்பு விஷயங்களும் அங்கு முடிவு செய்யப்பட உள்ளன.
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொலிஸ் பாதுகாப்பு தற்போது நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.