கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி
கொட்டாஞ்சேனை பெனடிக்ட் மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொட்டாஞ்சேனை பெனடிக்ட் மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (10) இரவு 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 43 வயதுடைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு டி-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கண்டுபிடிப்பதற்காக 04 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.